Monday, January 13, 2014

Jayanthi says modi cannot change country's condition!

புதுடில்லி : மோடியால் நாட்டின் நிலையை மாற்றி விட முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். கோவாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயந்தி இவ்வாறு கூறி உள்ளார்.

கோவாவின் விஜய்சங்கல்ப் பகுதி பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ஜெயந்திர நடராஜன் அமைச்சராக பதவியேற்றது முதல் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தில் ஜெயந்தி வரி என்ற பெயரில் பணம் அளிக்காமல் எந்த கோப்புக்களும் நகராது என கூறினார். இதற்கு ஜெயந்தி நடராஜன் பேட்டி ஒன்றில் பதிலளித்திருந்தார். பேட்டியில் அவர் கூறியதாவது : மோடியின் பேச்சு பிரிவினைவாத மற்றும் அழிவு அரசியலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது; மோடியின் பேச்சுக்கள் மிரட்டல் விடும் தோரணையில் அமைந்திருந்தது; எங்க கட்சிக்கு எதிராக ஒரு ஊழல் வழக்கை கூட மோடியால் காட்ட முடியாது; எவ்வித உண்மை தன்மையும் இல்லாத விஷயங்களை அவர் பொதுக் கூட்டத்தில் பேசி வருகிறார்; அவர் கூறிய விஷயங்களைக் கண்டு நான் பயந்துவிட மாட்டேன்; தனிப்பட்ட வகையில் அவர் என்னை குறித்து தாக்கி பேசி உள்ளார்; உண்மையில் குஜராத்தில் மோடி தான் இயற்கை வளங்களை அழித்து வருகிறார்.இவ்வாறு ஜெயந்தி நடராஜன் கூறி உள்ளார்.

மேலும், காங்கிரஸ் அரசுக்கு மக்கள் ஓட்டளித்து விடக் கூடாது என்பது வகுப்புவாத அரசியல் நடத்தும் மோடியின் விருப்பம்; அதை நிறைவேற்ற அவர் முயற்சி செய்கிறார்; ஆனால் நல்லதொரு இந்தியாவை உருவாக்குவது காங்கிரசின் கலாச்சாரம்; மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது; நாட்டின் நிலையை மாற்றி விடவும் முடியாது. இவ்வாறு மோடியின் உரையை தாக்கும் விதமாக ஜெயந்தி நடராஜன் பேசி உள்ளார். 

No comments:

Post a Comment