Thursday, March 7, 2013

As per Denmark court, indian jails violate Human Rights


புதுடில்லி: மேற்குவங்கத்தில் விமானத்தில் இருந்து
ஆயுதங்களை வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியை டென்மார்க் நாட்டில் இருந்து
இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில்
ஏ.என்-26 ரக விமானத்தில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், ராக்கெட்
லாஞ்சர்கள் மற்றும் ஏராளமான கையெறி குண்டுகளை என 4 டன் எடை கொண்ட ஆயுதங்கள்
வீசப்பட்டன. சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிம்தேவ் உள்ளிட்ட ஐந்து லாட்வியா நாட்டைச்
சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிம் தேவ் டென்மார்க்
தப்பியோடிவிட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர சி.பி.ஐ. நடவடிக்கை
எடுத்து வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு கிம்தேவை இந்தியா அனுப்ப டென்மார் அரசு
சம்மதித்தது. எனினும் தாம் இந்திய சிறையில் அடைக்கப்பட்டால் மனித உரிமை
மீறலுக்கும், சித்ரவதைக்கும் உள்ளாவேன் என கூறி, அங்குள்ள கோர்ட்டில்
கிம்தேவ்தொடர்ந்த வழக்கில் அவனுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவனை
இந்தியா கொண்டுவர தாமதம்ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று டென்மார்க் அ
திகாரிகள் சென்று உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
தாமதம் ஏன்?: இது குறித்து உள்துறை செயலர் ஆர்.கே.சிங்
கூறுகையில், கிம்தேவ் இந்தியா செல்ல அந்நாட்டு கோர்ட் தடைவிதித்துள்ளதால்,
அதனை எதிர்த்து , டென்மார்க் அரசு அப்பீல் செய்யவில்லை. மேலும் தூதரக
ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கிம்தேவை நாடு கடத்தி இந்தியா
கொண்டுவருவது தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்யுமாறு டென்மார்க் அரசு
கேட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment