செய்தி !
"புதுடில்லி: நாடு முழுவதும் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வாணி குமார் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது இது குறித்து அவர் கூறியதாவது: ஏற்றுக்கொள்ள முடியாத வழக்குகள் உட்பட பல்வேறு தரப்பட்ட வழக்குகளாக சுமார் மூன்று கோடி வழக்குகள் நிலுவையி்ல் உள்ளது. இது கவலைக்குரிய விசயமாகும். இருப்பினும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமன விசயத்தில் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நீதிபதிகள் நியமிப்பது, இ-கோர்ட்டுகள் அமைப்பது, சிறப்பு நீதிமன்றம் , கோர்ட்டுகள் முழுவதும் கம்ப்யூட்டம் மயமாக்குவது, நிர்வாகத்தை நவீனப்படுத்துவது போன்றவை நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்கள் மறறும் கீழ் நீதிமன்றம் உட்பட 11 ஆயிரம் நீதிமன்றங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளது. என கூறினார்.
நாட்டின் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் வரையில் சுமார் 69 ஆயிரத்து 569வழக்குகள் நிலுவையில் உள்ளது.இதில் சுமார் 21 ஆயிரத்து 862 வழக்குகள் ஒரு ஆண்டுக்குள் உட்பட்டவையாகும் என அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்."
- கணினி மயமாக்குதல் மற்றும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் பாரத்தை குறைக்க உதவும்!
No comments:
Post a Comment